முதல் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டது எப்படி, எங்கு தெரியுமா - இவ்வளவு வசதிகளா!
மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள செயற்கை கடற்கரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை கடற்கரை
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனாவால் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியை மணல் போட்டு நிரப்பி, நிலப்பரப்பாக மாற்றி இந்தக் கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கற்கள் நிரப்பப்பட்டு, அலையின் சீற்றம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வசதிகள்
மேலும், அதில் நீந்த முடியும் என்பதோடு நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த செயற்கை கடற்கரையைப் பார்வையிடலாம். இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.
சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு வரும் மக்களின் கூடுதல் பொழுதுபோக்கிற்காக அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.