ரத்த வெள்ளத்தில் கடற்கரை - திருவிழாவில் கொல்லப்பட்ட 1,428 டால்பின்கள்
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் தீவில் 1,428 டால்பின்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் மக்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து வந்து கரையில் கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் பரவி சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதனிடையே ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.