அம்பேத்கரை இழிவாக பேசிய இந்துத்துவா பேச்சாளர் RBVS மணியன் கைது!
அம்பேத்கரை அவதூறாகப் பேசிய RBVS மணியன் கைது செய்யப்பட்டார்.
அவதூறுப் பேச்சு
விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன், சனாதனத்தை ஆதரித்து அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, திருவள்ளுவர் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து
அவதூறாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறிப்பிட்ட ஜாதியினரை முஸ்லிமாக மதம் மாறக்கூடாது, அதற்குப் பதிலாக அரிவாளை தூக்கிக்கொண்டு வெட்ட கற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
மணியன் கைது
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், அவருக்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தன. அதனையடுத்து, அவரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.