ஆபாச மெசேஜ்...31 மாணவிகளுக்கு டியூசனில் பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்!
டியூசனில், மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடற்கல்வி ஆசிரியர்
வேதாரண்யம், கத்திரிப்புலம் ஊரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோகன்(38). இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் உள்ளார்.
பள்ளிக்கு அருகிலேயே தனியாக டியூஷன் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார். அங்கு 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், அசோகன் வாட்ஸ் அப் மூலம் நிறைய ஆபாச மெசேஜ்களை அனுப்பி,
பாலியல் தொல்லை
பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதில் 18 மாணவிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த 18 மாணவிகளும், பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் நேரடியாக அசோகன் குறித்து புகார் அளித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், உடனடியாக மாவட்ட கலெக்டர் முதன்மை கல்வி அலுவலர், கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பி இருக்கிறார்.
போக்சோவில் கைது
இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில் டியூசனில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அசோகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.