ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் - இந்தியாவின் முடிவு என்ன?
ஷேக் ஹசீனாவை கைது செய்ய வங்கதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
வங்கதேச கலவரம்
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்கள் பிரதமரின் அதிகார பூர்வ இல்லத்திற்குள் புகுந்ததையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதன் பின் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு வாரண்ட்
இந்நிலையில், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு வங்கதேசம் கோரிக்கை வைக்கலாம். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்பதும், அரசியல் காரணங்களுக்காக தஞ்சம் அடைந்தவரை திருப்பி அனுப்ப முடியாது என கோரிக்கையை நிராகரிப்பதும் இந்தியாவின் கையிலே உள்ளது.