வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - இந்தியாவுக்கு தப்பி வந்த பிரதமர் ஷேக் ஹசீனா?
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை பிடித்ததையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச கலவரம்
வங்கதேசத்தில் ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து 300 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு வசித்து வரும் வெளிநாட்டு மக்களை நாடு திரும்புமாறு அந்தந்த நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.
தப்பி ஓட்டம்
இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி மக்கள் முன் உரையாற்றினார். இதில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.
மேலும், போராட்டக்காரர்கள் பிரதமரின் அதிகார பூர்வ இல்லத்திற்குள் புகுந்து விட்டனர். இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள அகர்தலாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
A video purportedly documenting the first moments of Bangladeshi Prime Minister Sheikh Hasina’s escape, showing her boarding a helicopter to flee the country. It is rumored that she headed to India.pic.twitter.com/G14WLv6yLa
— Moneer (@MoneerShareef) August 5, 2024
இதனையடுத்து ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக ராணுவ தலைமை ஜெனரல் வேக்கர் உல் ஜமான் தெரிவித்துள்ளார். மேலும் இன்று இரவுக்குள் அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
முஜிபுர் ரகுமான்
76 வயதான ஷேக் ஹசீனா 2009 முதல் தற்போது வரை அந்நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். இவர் இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார். முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் நாடு விடுதலை அடைந்த 4 வருடத்தில் சொந்த நாட்டு ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். தற்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.