ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம்.. சாலையில் இளைஞர்கள் தூங்கும் அவலம் - என்ன நடக்கிறது?
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமில் அடிப்படை வசதி இல்லாமல் இளைஞர்கள் அவதிப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள்
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அதற்காக ஆள்சேர்ப்பு முகாம் கோவையில் நடைபெற்றது. காலை 5 மணிக்கு தெலுங்கானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும்,
புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நடைபெறுகிறது. இன்று தொடங்கவுள்ள முகாமில் கலந்துகொள்ள தெலுங்கானா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் கோவை வந்தனர்.
அதிகாலையில் முகாம் தொடங்கவுள்ளதால் அதற்கு முன்பே வர வேண்டும் என்ற நிலையில் வெளிமாநில இளைஞர்கள் இரவே வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் இளைபாரவோ, தூங்கவோ வசதி ஏதும் இல்லாததால் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது.
முகாம்..
இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் படுத்து தூங்கி ஓய்வெடுத்தார். உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. அதுமட்டுமின்றி கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். அது தொடர்பான புகைபடங்கள் வைரலாக தொடங்கியது.
இதை தொடர்ந்து, நாளை ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நாளை மறுநாள் ராஜஸ்தான், மராட்டியம் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடக்கிறது. 7ம் தேதி தமிழகத்தில் உள்ள அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல்,
கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்ப லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெறுகிறது.
8ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும் நடைபெறுகிறது.