ராணுவ முகாம் துப்பாக்கி சூடு - இறந்த 4 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் - அதிர்ச்சி
ராணுவ முகாம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
பஞ்சாப், பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களை கையாளும் அந்த முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த ராணுவ வீரர்கள் வசிப்பதற்காக ராணுவ முகாம் வளாகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முகாமில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தும் சத்தம் கேட்டுள்ளது. உடனே, அதிகாரிகள் உணவக பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
2 தமிழர் பலி
அப்போது குண்டு பாய்ந்து 4 பேர் பலியாகி கிடப்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர் விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியது பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இறந்தவர்களில் ஒருவரான கமலேஷின் சொந்த ஊர் சேலம். உயிரிழந்த மற்றொரு வீரரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
தேனியை சேர்ந்த யோகேஷ் குமார் (24) என்ற வீரரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தமிழக வீரர்கள் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.