நண்பர்கள் முன்..மனைவியை கடித்து கொடூர செயலில் ஈடுபட்ட ராணுவ வீரர்!
ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவிக்குச் செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர்
குஜராத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர். இவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். அப்போது விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், மனைவியின் மீது சந்தேகத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் மனைவியை தனது நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் மனைவி போலீஸிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில், ராணுவ வீரர் மற்றும் நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணையில் "எனது கணவர் திலீப் தாகூர் அவரது நண்பர் பின்டூவின் காரில் என்னை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
கொடூர செயல்
அவர்களுடன் அவரது நண்பர் கல்பேஷ் என்பவரும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் ஒருவரும் இருந்தனர். அப்போது திடீரென ஆவேசமடைந்த எனது கணவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார். நண்பர்கள் முன்னிலையிலேயே என் கணவர் ஆடைகளைக் கழற்றச் சொன்னார்.
நான் மறுத்த போது, வலுக்கட்டாயமாக எனது ஆடையைக் கழற்றிய எனது கணவர் உதட்டையும் கடித்தார். பிறகு என் மார்பிலும் காதிலும் கடித்தார். இதனால் எனக்கு ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து அவர்கள் முதலில் என்னை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
வழக்குப்பதிவு
மேலும், அங்குள்ள மருத்துவர், இது கிரிமினல் கேஸ் என்பதால் எனக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். உதட்டில் எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு ஆப்ரேஷன் செய்து சிகிச்சை அளித்தனர்.
அவரது நண்பர்கள் தான் நான் திருமணத்திற்குத் தாண்டிய உறவை வைத்து உள்ளதாகப் பொய்யான தகவலை அவரிடம் கூறி உள்ளனர். இதன் காரணமாகவே அவர் இப்படி நடந்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.