ஆம்ஸ்ட்ராங் மரணம்: ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Bahujan Samaj Party Tamil nadu DMK Death
By Jiyath Jul 06, 2024 09:33 AM GMT
Report

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

உதயநிதி ஸ்டாலின் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

ஆம்ஸ்ட்ராங் மரணம்: ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி ஸ்டாலின்! | Armstrongs Death Is A Huge Loss Says Udayanidhi

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்.

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்களால் பாஜகவுக்கு பின்னடைவு - ஆர்.பி.உதயகுமார்

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்களால் பாஜகவுக்கு பின்னடைவு - ஆர்.பி.உதயகுமார்

தண்டனை

இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆம்ஸ்ட்ராங் மரணம்: ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி ஸ்டாலின்! | Armstrongs Death Is A Huge Loss Says Udayanidhi

சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.