ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..15 பேர் மீது குண்டாஸ் - காவல் ஆணையர் அதிரடி!

Bahujan Samaj Party Tamil Nadu Police Law and Order
By Vidhya Senthil Sep 20, 2024 10:17 AM GMT
Report

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 குற்றவாளிகளுக்குக் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

armstrong

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு சென்னையில் ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!

இதனையடுத்து கு.ஹரிகரன்,மலர்கொடி, சதீஷ்குமார்,கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா,பிரதீப், முகிலன், விஜயகுமார் (எ) விஜய், விக்னேஷ் (எ) அப்பு, அசுவத்தாமன், பொற்கொடி,ராஜேஷ், செந்தில்குமார் (எ) குமரா, கோபி ஆகிய உள்ளிட்ட 15 பேரை காவல்துறை கைது செய்தது.

குண்டாஸ்

இந்த நிலையில் நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் கைது செய்யப்பட்ட 15 குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

tamilnnadu police

மேலும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி. திருட்டு ,கட்டப்பஞ்சாயத்து , பணம் பறித்தல் , போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அருண் தெரிவித்துள்ளார்.