ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. போலீசார் விசாரணையா? -மறுப்பு தெரிவித்த நெல்சன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நெல்சனிடம் காவல்துறை விசாரணை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு அவருடைய கூட்டாளிகள் வாக்கு மூலம் அளித்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் திமுக ,காங்கிரஸ் ,பாஜக அதிமுக நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது .
இந்தச் சூழலில் சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை காவல்துறையினரால் கைது செய்தனர்.மேலும், பல ரவுடிகள் இந்த வழக்கில் தொடர்பில் இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரவுடி நாகேந்திரனை காவல்துறையினர் கைதனர் .
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை மொத்தம் 23 பேர் கைதாகியுள்ளனர்.
நெல்சன் மறுப்பு
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவரிடம் தொலைப்பேசியில் திரைப்பட இயக்குநர் நெல்சன் மோனிஷா பேசியதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நெல்சன் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.75 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இருவரும் சென்னை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் சந்தித்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த பணமானது வழக்கு தொடர்பாகவும் நண்பர் என்ற முறையிலும் பணம் அனுப்பியதாக நெல்சன் மனைவி மோனிஷா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நெல்சனிடம் காவல்துறை விசாரணை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை தனக்குச் சம்மனும் அனுப்பவில்லை, விசாரணையும் நடைபெறவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.