ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தீவிர விசாரணை!

Bahujan Samaj Party Chennai Nelson Dilipkumar Murder
By Swetha Aug 20, 2024 06:43 AM GMT
Report

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தீவிர விசாரணை! | Is Nelsons Wife Link In Armstrong Murder Case

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடிகளுக்கும் இடையே தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?திடுக்கிடும் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?திடுக்கிடும் தகவல்!

நெல்சனின் மனைவி

குறிப்பாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்கிற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்று இருக்கக்கூடிய நிலையில்,

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தீவிர விசாரணை! | Is Nelsons Wife Link In Armstrong Murder Case

அவருடன் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மொட்டை கிருஷ்ணனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் மோனிஷா பேசியது தெரியவந்துள்ளதை அடுத்து,

எதற்காக அவர் பேசினார் என்கிற அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாட்களாக ரவுடி ராதாகிருஷ்ணன் தலைமுறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மோனிஷா, அடைக்கலம் ஏதும் கொடுத்தாரா?

அவர் தலைமறைவாக இருப்பதற்கு ஏதேனும் உதவி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.