வினோதமான உணவா இருக்கே...அக்குள் வியர்வையில் அரிசி உருண்டைகள் !

Viral Video Japan Fast Food
By Swetha May 07, 2024 10:53 AM GMT
Report

அக்குளை வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும்‌ சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுகிறது.

அக்குள் வியர்வை 

ஓனிகிரி அரிசி உருண்டைகள் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜப்பானிய சிற்றுண்டி உணவாகும். சோறில்‌ தயாரிக்கப்படும்‌ இந்த உணவில் மீன்‌, இறைச்சி வகைகளை வைத்து கடற்பாசியால்‌ மூடி தயார் செய்த பிறகு விற்கப்படுகிறது. தற்போது இந்த சிற்றுண்டி ஒரு புதிய வினோதமான திருப்பத்தை எடுத்துள்ளது.

வினோதமான உணவா இருக்கே...அக்குள் வியர்வையில் அரிசி உருண்டைகள் ! | Armpit Sweat Onigiri New Viral Food In Japan

இந்த நிலையில், ஜப்பான்‌ நாட்டில் கையினால்‌ தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும்,‌ வட்டமாகவும்‌ செய்து விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கின்றன. இதனை தயாரிக்கும் பெண்கள் தேவையான சுகாதார நெறிமுறையைப்‌ பின்பற்றுகிறார்கள்‌.

சிறுநீரில் வேகவைத்த முட்டை; விரும்பி உண்ணும் மக்கள் - அதில் அப்படி என்ன இருக்கு?

சிறுநீரில் வேகவைத்த முட்டை; விரும்பி உண்ணும் மக்கள் - அதில் அப்படி என்ன இருக்கு?

அரிசி உருண்டை

அவர்கள்‌ உணவை தயாரிக்கும்‌ முன்பு தங்கள்‌ உடல்‌ பாகங்களை முழுமையாக கிருமி நீக்கம்‌ செய்கிறார்கள்‌. பின்னர்‌ பெண்கள்‌, வியர்க்கத்‌ தொடங்கும்‌ அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறார்கள்‌. இப்படியாக அவர்கள் கைகளைப்‌ பயன்படுத்துவதற்குப்‌ பதிலாக தங்களது அக்குள்களைப்‌ பயன்படுத்தி உணவை தயாரிக்கிறார்கள்.

வினோதமான உணவா இருக்கே...அக்குள் வியர்வையில் அரிசி உருண்டைகள் ! | Armpit Sweat Onigiri New Viral Food In Japan

ஒரு சில உணவகங்களில் இந்த ஒனிகிரி எப்படி உருவாகிறது என்பதை வெளிப்படையாக செய்து காட்டுகின்றனர். இதனை வாடிக்கையாளர்களை பார்க்கவும் அனுமதிக்கின்றனர். மேலும் கையினால் தயாரிக்கப்படும் ஓனிகிரியை விட மனித வியர்வைகலக்கப்பட்ட உணவு 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக்‌ கூறப்படுகிறது. இந்த செய்முறை வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஒரு சிலர் இந்த தயாரிப்பில் தனித்துவமான சுவையாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்‌.