இந்தியாவை 3 நாளில் முடித்து விடுவோம் - இலங்கை முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்
இந்திய அணியை இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனது. சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடரை இழந்தது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இந்திய அணியின் தரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அர்ஜுனா ரணதுங்கா
தனியார் சேனலுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "1990 காலகட்டத்தில், நான் கேப்டனாக இருந்த போது கவாஸ்கர், வெங்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத் என வீழ்த்த முடியாத பேட்டிங் ஆர்டர் இருந்தது. அடுத்ததாக அசாருதின், சச்சின், காம்ப்ளி, டிராவிட் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் எல்லாம் எவ்வளவு தரமான வீரர்கள் என்பது உலகறியும். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்க வேண்டாம். இப்போது இந்தியாவில் அதுபோல திறமையான வீரர்கள் இருக்கிறார்களா? இல்லை என்றுதான் சொல்வேன்.
தனியார் கிரிக்கெட்
1996 ஆம் ஆண்டு இருந்த எனது அணியை வைத்து, இப்போது உள்ள இந்திய அணியை இந்தியாவில் வைத்து 3 நாளிலே வீழ்த்தி விடுவோம். இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான கிரிக்கெட்டைக் கற்றுத் தருகிறோமா? கவாஸ்கர், அமர்நாத், சச்சின், டிராவிட் போன்ற வீரர்களை இந்தியா உருவாக்க முடியுமா?
இலங்கை அணியிலும் இந்த பிரச்சினை உள்ளது. தற்போதுள்ள வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. தனியார் கிரிக்கெட்டை ஆடி, நாட்டிற்காக விளையாடுவதை வீரர்கள். இன்னும் 5 ஆண்டுகளில் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு வீரர்களிடம் போய்விடும்" என கூறியுள்ளார்.