அக்காவை தொடர்ந்து காதலில் அர்ஜுனின் 2வது மகள்? வெளியான புகைப்படம்
அஞ்சனா அர்ஜுன் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சமீபத்தில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களது திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். இவர்களது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகியது.
அஞ்சனா அர்ஜுன்
தற்போது, அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா குடும்பத்துடன் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் புது நபர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் உங்கள் காதலரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து அஞ்சனா அர்ஜுன் எந்த பதிலும் அளிக்கவில்லை.