நடிக்க வேண்டாம் என முடிவு - அதை கேட்டவுடன் முடிவை மாற்றிய அர்ஜூன்!
நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த அர்ஜூன் ஷங்கரின் கதையை கேட்டு மனம் மாறியுள்ளார்.
நடிகர் அர்ஜூன்
தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜுன். தமிழில் டாப் ஹீரோவானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தனிப் பெயரைப் பெற்றவர். 60 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடலை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
ஜென்டில் மென்
முன்னதாக ஆரம்ப காலக் கட்டத்தில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன் சொந்த பணத்தை வைத்து தானே இயக்கி நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளார். சேவகன் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடிக்க துவங்கினார்.

மேலும் அந்த காலகட்டங்களில் வேறெந்த இயக்குனரின் இயக்கத்திலும் நடிக்க வேண்டாம் என எண்ணியுள்ளார். ஆனால் ஷங்கர் வந்து ஜென்டில் மென் கதையை சொன்னவுடன், இப்படத்தை மிஸ் செய்யக்கூடாது என முடிவெடுத்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
அப்படம் அர்ஜுனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தற்போது விஜய்யின் லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற ரோலில் நடித்து வருகிறார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil