2 குழந்தைகளை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற பெண் - திரும்ப அழைத்து வந்ததில் பயங்கரம்!
கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணை திரும்ப அழைத்து வந்ததில் தற்கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
அரியலூர் அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. சத்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இதனால், 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சத்யா, அவருடன் திருப்பூரில் தங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர், சத்யாவிற்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள தேக்கு மரத் தோப்பில், மர்மமான முறையில் சத்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவின் தற்கொலைக்குக் காரணம் கள்ளக்காதலன் என குற்றம்சாட்டப்பட்டதால், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.