15 கோடி வருஷம்; மாயமான ஆர்கோலாண்ட் - ஒரு வழியா கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
15 கோடி ஆண்டுகள் பழமையான ஆர்கோலாண்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்கோலாண்ட்
ஆஸ்திரேலியா உடன் இருந்த பகுதி ஆர்கோலாண்ட். இது கண்டமாகசுமார் 15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்புதனியாகப் பிரிந்தது. அதன் பிறகு மாயமானது. இதற்கிடையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தற்போது நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆர்கோலாண்ட் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்கு தீவுகளுக்கு அடியில் உள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பேசுகையில், இது ஆஸ்திரேலியாவின் வடக்கே சென்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.
புதிய தகவல்
ஆனால், இப்போது அது தென்கிழக்கு ஆசியாவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்" என்றனர். இந்தோனேசியா மற்றும் மியான்மரைச் சுற்றி பகுதிகளில் இந்த பண்டைய கண்டத்தின் பகுதிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இருப்பினும், முழுமையாக அந்த கண்டனம் எங்கே இருக்கிறது என்பது உறுதியாகவில்லை. டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்ட நகர்வு காரணமாக அது ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்துள்ளது.
காலப்போக்கில் அது தென்கிழக்கு ஆசியா பகுதியில் சிதறியது. இது வடக்கு நோக்கி நகர்ந்த பிறகு, அது துண்டுகளாகச் சிதறிய நிலையில், அதைச் சுற்றி பெருங்கடல்களும் உருவாகியிருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.