மெஸ்ஸி'யால் ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பிய 90 வயது மூதாட்டி..! சுவாரசிய பின்னணி
துப்பாக்கியுடன் வந்த ஹமாஸ் படையினரிடம் இருந்து மெஸ்ஸி பேரை சொல்லி 90 வயது மூதாட்டி உயிர் தப்பிய ருசிகர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
இஸ்ரேல் மீது காசாவில் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையினர் பதில் தாக்குதல் நடத்த காசா நகரில் பெரும் பதற்றம் நீடித்து வருகின்றது.
ஹமாஸ் படையினரின் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மூதாட்டி ஒருவர் சாதுரியமாக உயிர் தப்பிய சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெஸ்ஸி பெயர்...
90 வயதான எஸ்டர் குனியோ என்ற மூதாட்டி இது குறித்து பேசுகையில், கடந்த அக்டோபரில் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்த போது தான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் என கூறிய போது, அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன..? கேட்டனர்.
அப்போது தான், நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? என்றும் அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்ததாக கூறிய மூதாட்டி, இதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை
என்னிடம் கொடுத்துவிட்டு செல்பி எடுத்து சென்றனர் என்று எஸ்டர் குனியோ கூறியுள்ளார்.