மெஸ்ஸி பரிசாக கொடுத்த T.Shirt-டை அணிந்த தோனியின் மகள் - வைரலாகும் க்யூட் புகைப்படம்...!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கையெழுத்திட்ட T.Shirtடை இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் மகள் அணிந்து மகிழ்ந்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி
FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி கால்பந்து ரசிகர்களால் இதுவரை கண்டிராத மிகவும் உற்சாகமான கால்பந்து விளையாட்டாகும்.
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார். அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.
T.Shirtடை அணிந்து மகிந்த தோனியின் மகள்
2 முறை உலகக் கோப்பை சாம்பியனான மகேந்திர சிங் தோனி தீவிர கால்பந்து ரசிகர். அவரை விட அவருடைய மகள் ஜிவா, மெஸ்ஸியின் தீவிர ரசிகையாவார்.
இந்நிலையில் தோனி மகள் ஜிவா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், அர்ஜென்டினா ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி அவருக்கு வழங்கிய T.Shirt டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடிவைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறிக்க விட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்திற்கு மேல் அதிகமானோர் இப்படத்திற்கு லைக்குகளை கொடுத்துள்ளனர்.