அந்த பாடகரை போல் மாறனும் - 30க்கும் மேற்பட்ட ஆபரேஷன் செய்த இளைஞர்!
பாடகர் லுக்கில் மாற ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் 30க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களை செய்துள்ளார்.
பாடகர் ரிக்கி மார்ட்டின்
அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்கோ மரியானோ ஜேவியர் இபனேஸ். இவர் ஹாலிவுட் பாடகர் ரிக்கி மார்ட்டின் போல தனது தோற்றமும் மாற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதற்காக 30-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார்.

மேலும், 8 ஆயிரம் டாலர்களை(6 லட்சம்) செலவு செய்திருக்கிறார். இவரிடம் சிலர், நீங்கள் பாடகர் ரிக்கி மார்ட்டின் போல உள்ளீர்கள் என்று சொன்னார்களாம். அதிலும் தெருக்களில் நடந்து செல்லும்போது சிலர் இதைச் சொல்லி செல்ஃபி எடுத்துக் கொள்வார்களாம்.
30 ஆபரேஷன்
எனவே முழுமையாக வரை போல மாறிவிட எண்ணி இவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து இதனால், மூக்கு, கன்னம், தாடை போன்ற இடங்களில் உணர்ச்சியே இல்லாமல் ஆகியுள்ளது.

அறுவை செய்ய தொடங்கிய நாளிலிருந்து இதுவரை, அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொள்ள அடிக்கடி மேல் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கவலை தெரிவித்துள்ளார்.