பிக்பாஸ் அர்ச்சனா அந்த சீரியல் நடிகருடன் காதலா? உறுதிப்படுத்தும் கமெண்ட் குமியும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது.
அர்ச்சனா
விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக வளம் வந்தவர் அர்ச்சனா. அதில் அவருக்கு அமோகமான வரவேற்பு வந்த நிலையில், தான் typecast செய்யப்படுவதாக கூறி அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து, அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மிக பெய்ய அளவில் பிரபலமடைந்து,
தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் அமைத்ததுடன் டைட்டிலையும் பெற்றார். இதற்கிடையில் அவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகின.
சீரியல் நடிகர்
இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் அருண் மற்றும் அர்ச்சனா இருவரின் காதலும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அருண் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட்-ன் போது அர்ச்சனாவும் உடன் இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இணையத்தில் வெளியிடப்பட்ட போட்டோஷூட் வீடியோ கமெண்டில் “Thanks for shooting my hero” என கூறி அர்ச்சனா போட்டோகிராபருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவர்களது காதல் உறுதியாகியிருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.