எனக்கு அப்படி தோணல... PS-1ல் நடிக்காதது குறித்து அரவிந்த் சாமி ஸ்டேட்மெண்ட்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்து அரவிந்த் சாமி சில தகவல் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சாமி
இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி மூலம் 1991-ம் ஆண்டில் தமிழ் சினிமாவுல முதல்முதலா என்ட்ரி கொடுத்தவர் அரவிந்த் சாமி. அதற்கு அடுத்த வருடமே ரோஜா படத்தின் மூலம் ஹீரோவானார். அதனைத் தொடர்ந்து பெண்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்.
பெண் ரசிகர்கள் அவர்களுக்கு ஏராளம். தற்போது தமிழ் சினிமாக்களில் வில்லனாக நடிப்பில் மாஸ் காடி வருகிறார். எந்த கதாபாத்திரமானாலும் அப்படியே பொருந்தி போய் விடுகிறார். மேலும் பல த்ரில்லர் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ரஜினி - அரவிந்த்சாமி
இந்நிலையில், ரஜினி - அரவிந்த்சாமி கூட்டணி தளபதி படத்திற்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மணிரத்தினம் திரைப்படத்தில் நீங்க பல படங்களை நடித்திருக்கிறீர்கள்.
தமிழ் சினிமா பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நீங்க ஏன் நடிக்கல? அல்லது மணிரத்தினத்திடம் நீங்க கேட்டீங்களா எனக்கு ஒரு கேரக்டர் வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு,
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் சாருக்கு நல்லாவே தெரியும் யாரை எந்த கேரக்டரில் நடிக்க வைக்கணும் என்று... பொன்னியின் செல்வன் என்று மட்டுமல்லாமல் மணிரத்னம் சார் கூட ஒர்க் பண்றதே ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான்.
அதனால பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கேரக்டர் குடுக்கல என்று எல்லாம் எனக்கு தோன்றவில்லை என நடிகர் அரவிந்த் சாமி பதில் கொடுத்திருக்கிறார்.