இவங்க மேயரா.. இல்ல LKG குழந்தையா? மேயர் பிரியாவை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்!
நடிகை அறந்தாங்கி நிஷா, சென்னை மேயர் பிரியாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
மேயர் பிரியா
சென்னையில் திமுக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சென்னை மேயர் பிரியா பங்கேற்றார். மேலும், சிறப்பு விருந்தினராக, பிரபல விஜய் டிவி பிரபலமும், நகைச்சுவை நடிகையுமான அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், சென்னை மேயர் பிரியாவை புகழ்ந்து பேசியுள்ளார். நிஷா பேசியதாவது "நான் மேடையில் வந்து அமர்ந்ததில் இருந்து, ஒரு மேயரிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா? இல்லை ஒரு எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா? என்றே தெரியவில்லை. பொதுவாக ஆண்கள் விமர்சனங்களை எளிதாக கடந்து சென்று விடுவீர்கள்.
நடிகை நிஷா புகழாரம்
ஆனால் பெண்கள் மீது விமர்சனம் வைக்கப்படும்போது, அது எங்களை தாண்டி எங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் என்று நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அத்தனை விமர்சனங்களுக்கும் எப்படி ஒற்றை புன்னகையில் கடந்து போகிறீர்கள் என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை.
நான் பார்த்து வியந்த ஒரு மேயர் மரியாதைக்குரிய பிரியா தான். அதை ஒரு பெண்ணாக கர்வத்துடன் இந்த மேடையில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எத்தனையோ வளரக்கூடிய பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. இந்த மேடையில் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம்' என்று நிஷா பேசியுள்ளார்.