இளம்பெண் அகால மரணம்; இனி கோயில் பூஜைகளில் இந்த பூவுக்கு தடை - அரசு உத்தரவு!
கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரளி பூ விஷம்
கேரளாவைச் சேர்ந்தவர் சூரியா சுரேந்திரன்(24). செவிலியராக இருந்தார். இவருக்கு லண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதன்படி அவர் லண்டனுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார். அதன் பிறகு வாந்தி, மயக்கம் என ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயில் பூஜைகளில் தடை
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கேரள அரசு நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட 1,200 கோயில்களிலும் மற்றும் மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட 1,300 கோயில்களிலும் அரளி பூக்களை இனி பிரசாதமாக வழங்கிட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்குமாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லிபூ, ரோசாப்பூக்களை நைவேத்தியம் மற்றும் பிரசாதத்துக்குவழங்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது. கோயில் பூஜைகளில்அரளிப்பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர்த்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் உங்க நட்சத்திரம்? Manithan

Super Singer: பிரியங்காவிற்கு பதில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய பிரபல நடிகை... பின்னணி பாடகியாகிய குழந்தைகள் Manithan
