ஒரு கடலையே காணோமாம்.. அதுவும் 50 வருஷத்தில் - அதிர்ச்சி பின்னணி!

Weather World
By Sumathi Feb 10, 2024 07:19 AM GMT
Report

கடல் முழுவதும் வற்றி காணாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 ஆரல் கடல்

உலகின் சராசரி வெப்பம் முதன்முறையாக 1.5 டிகிரி வரம்பிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், வரும் காலங்களில் புவி வெப்ப மயமாதல் காரணமாக மேலும் பல மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

aral sea

அந்த வரிசையில், கஜகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஆரல் கடல் அமைந்துள்ளது. இது ஒரு நன்னீர் ஏரி. ஆனால், நியோஜீன் காலத்தின் இறுதியில் கடலை போலப் பிரம்மாண்டமானதாக இருந்துள்ளது. 2010ல் இது மொத்தமாக வறண்டு போனது.

இது லிஸ்ட்லயே இல்லையே: 48,500 ஆண்டு பழைய ZOMBIE VIRUS - பேராபத்து!

இது லிஸ்ட்லயே இல்லையே: 48,500 ஆண்டு பழைய ZOMBIE VIRUS - பேராபத்து!

வறண்டு போன கொடுமை

இந்த ஆரல் கடல் என்பது 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய ஏரியாக இருந்தது. தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது.

oceans-disappearing

இதனால் வற்றத்தொடங்கிய கடல் பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் காணாமல் போகி நிலம் போம் மாறிவிட்டது. மனிதர்கள் செய்யும் செயலால் காலநிலை மாற்றம் எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என இதன்மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.