திடீர் பரபரப்பு - ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற ஏ.ஆர்.ரகுமான் - என்ன நடந்தது?
ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆடி காரில் வந்த ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் புறப்பட்டு சென்றுள்ளார்.
மவுண்ட் ரோடு தர்கா
சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்னும் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.
ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி பாக்தாதி 450 ஆண்டுகளுக்கு முன்பு பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து , தற்போது மவுண்ட் ரோடு தர்கா என்று அழைக்கப்படும் இடத்தில் வாழ்ந்தார். அவர் இறந்தவுடன், அவரது வீட்டிற்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஏ.ஆர்.ரகுமான்
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படவே, ஆடி காரில் வந்த ஏ.ஆர்.ரகுமான் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.