நள்ளிரவில் குலுங்கிய தர்கா சமாதி - திரண்ட பக்தர்கள்
Viral Video
Andhra Pradesh
By Thahir
தர்காவில் நள்ளிரவில் சமாதி அசைந்ததால் ஏராளமான மக்கள் திரண்டனர்.
நள்ளிரவில் குலுங்கிய சமாதி
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு நகரம் அருகே பென்னா நதிக்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான குடுமஸ்தான் தர்கா வள்ளி சமாதி ஒன்று உள்ளது.
அங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று இரவு அன்னதானம் நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி உணவு அருந்தி சென்றனர்.
அப்போது சமாதி அசைவதாக கருதிய பக்தர்கள் அதை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதையடுத்து நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.