கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர். ரஹ்மான் - சூடு பிடிக்கும் அதிபர் தேர்தல்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக 30 நிமிடங்கள் அடங்கிய பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டார். ஆனால் உடல் நலனைக் கருத்தில் கொண்டு போட்டியிலிருந்து விலகினார்.
இதனையடுத்து அமெரிக்கத் துணை அதிபரான கமலா ஹாரிஸ், ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது இந்த தேர்தலில் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உலக நாடுகள் அணைத்தும் இதன் முடிவுகளை உற்று நோக்கி வருகின்றனர்.
இதற்கிடையே கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான்
அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக 30 நிமிடங்கள் அடங்கிய பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.