ஏ.ஆர். ரஹ்மான் ஜெய் ஹோ பாடலுக்கு இசை அமைக்கவில்லையா? போட்டுடைத்த இயக்குனர்!
ஜெய் ஹோ’ பாடலை ஏஆர் ரகுமான் இசைக்கவில்லை என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய் ஹோ பாடல்
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் குறிப்பாக இடம்பெற்ற ‘ஜெய் ஹோ' உலகம் முழுவதும் ஹிட் ஆனது. இதற்காக ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று உலக புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில், ஜெய் ஹோ பாடலை ஏஆர் ரஹ்மான் இசைக்கவில்லை என்று சமீபத்தில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அண்மையில் ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் பேசியிருந்தார்.
போட்டுடைத்த இயக்குனர்
அப்போது அவர், பிரபல இந்தி பாடகர் சுக்வீந்தர் சிங் என்பவர் சல்மான்கான் நடித்த படம் ஒன்றுக்காக கம்போஸ் செய்து வைத்திருந்த பாடல் தான் ‘ஜெய் ஹோ’ பாடல் என்றும், அந்த பாடலை தான் ஏஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தி கொண்டார் என்று கூறினார்.

இந்த விவகாரம் பெரும் பூகம்பமாக வெடித்ததையடுத்து, பாடகர் சுக்வீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், ’ராமகோபால் வர்மா சொல்வதில் உண்மை எதுவுமில்லை என்றும் ஜெய் ஹோ பாடல் முழுவதும் ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்ததுதான் என்றும், அவர் தவறாக புரிந்து கொண்டு அடிப்படை ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil