தற்கொலை செய்ய நினைத்தேன்.. அப்போ அவர் சொன்னதுதான் - மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

Sumathi
in பிரபலங்கள்Report this article
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் தற்கொலை செய்ய எண்ணியதாகத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என புகழ் உச்சத்திற்கு சென்றவர்.
இவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். அண்மையில் பொன்னியின் செல்வன், மாமன்னன், சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்கொலை
இதனைத் தொடர்ந்து, இவர் இசையமைப்பில் ஆடுஜீவிதம், லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இவர் தற்கொலை குறித்து பேசியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில், "தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எனக்கும் தோன்றியிருக்கிறது. அப்போது என்னுடைய அம்மா என்னிடம், நீ மற்றவர்களுக்காக வாழும்போது அந்த மாதிரியான தவறான எண்ணம் தோன்றாது என கூறினார்.
உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாககூட அது இருக்கலாம். அடுத்தவருக்கு உணவு வாங்கி கொடுப்பதாக இருக்கலாம். அல்லது ஒரு புன்னகையைகூட உதிர்க்கலாம். இந்த மாதிரியான விஷயங்கள்தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.