பாலியல் சீண்டல், கொதித்த ரசிகர்கள்; டிக்கெட் நகலை அனுப்புங்கள் - ஏ.ஆர்.ரகுமான் உறுதி!
டிக்கெட் நகல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் மழை குறுக்கிட்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு வேறு நாளில் இசைக் கச்சேரியை நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, நேற்று நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு நடத்தப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ 3 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மாலை 3 மணி முதலே ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களால் டிக்கெட் இருந்து குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.
கொதித்த ரசிகர்கள்
மேலும் டிக்கெட் இல்லாதவர்களும் தள்ளுமுள்ளு செய்து உள்ளே நுழைந்துவிட்டதாக தெரிகிறது. இதில் ஏற்கெனவே மைதானம் நிரம்பிவிட்டதால் உள்ளே விட மறுப்பு தெரிவித்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். 20 ஆயிரம் இருக்கைகள் போட்டுவிட்டு 1 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகளை விற்று ஏற்பாட்டாளர்கள் மோசடி செய்ததாக கூறுகிறார்கள்.
Exactly this. https://t.co/UEmLBgJv5r pic.twitter.com/NkAHehWfb9
— Paaru Kumudha Pathikum (@Edukudaa) September 10, 2023
நிகழ்ச்சியின் கூட்டத்தால் பெண்களுக்கு பாலியல் சீண்டல், அடிதடி, மூச்சுத் திணறல் என மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் இதனால் வருத்தமடைந்த நிலையில்,
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap?@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
ஏ.ஆர்.ரகுமான் அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.