ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி....பையன் உயிர் பிழைச்சதே பெருசு...புலம்பிய ரசிகர்கள்..!!
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியில் நிறைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக நிகழ்ச்சிக்கு வருபுரிந்த ரசிகர்கள் பலரும் புகார் அளித்துள்ளனர்.
"மறக்குமா நெஞ்சம்"
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியிலுள்ள ஆதித்யராம் பேலஸ்ஸில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இந்த இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 ரூபாய் முதல் 15 ஆயிர ரூபாய் வரை பணம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில், அங்கு எந்த ஒரு ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப்படவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
புலம்பிய ரசிகர்கள்
பார்க்கிங் வசதி, சேர் வசதி என எதுவும் சரிவர செய்யப்படாத நிலையில், பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் க்யூவில் நிற்கவும் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நேற்று மாலை ஈசிஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கச்சேரியை பார்க்க கார்களில் வந்த பலரிடமும் பார்க்கிங் வசதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். 5000 ரூபாய் பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கியும் சும்மா போக சொல்றீங்களே என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த கூட்ட நெரிசலில் இன்னும் 2 நிமிடங்கள் தாமதித்து இருந்தால், தனது குழந்தையின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்றும் ரசிகை ஒருவர் வேதனையுடன் கருத்தை தெரிவித்துள்ளார்.