இசை துறையில் மற்றொரு விவாகரத்து - கணவரை பிரிவதாக அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே
ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து அவருடன் பணியாற்றிய பெண் இசையமைப்பாளரும் விவகாரத்தை அறிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து
ஆஸ்கார், கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்று உலகளவில் இந்திய இசையின் அடையாளமாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
நேற்று ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை பிரிவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோகினி டே விவாகரத்து
இந்நிலையில் மற்றொரு இசை துறையில் பணியாற்றும் தம்பதியும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். பிரபல பேஸ் கிடாரிஸ்டான மோகினி டே (Mohini Dey) தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்வை(Mark Hartsuch) பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் "நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர உள்ளோம். நாங்கள் எப்போதும் ஒன்றாக நன்றாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறோம், அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது இது இருவரும் பரஸ்பர சம்மத்துடன் எடுக்கப்பட்ட முடிவு" என அறிவித்துள்ளார்.
மார்க் ஹார்ட்சுவும் இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். 29 வயதான மோகினி டே மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் 40 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர்.