திருமண சட்டத்தில் வரும் அசத்தல் மாற்றம் - ஏப்ரல் 15 முதல் அமல்!

Marriage United Arab Emirates
By Sumathi Feb 21, 2025 09:00 AM GMT
Report

 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருமண நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

திருமண சட்டம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருமணம் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது 18.

marriage

18 வயதை பூர்த்தி செய்துவிட்டால் பெண்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி பெண்கள் நீதி பெறலாம்.

திருமண விஷயத்தில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ அதிகாரம் செலுத்தக் கூடாது. திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான வயது வித்தியாசம் 30க்கும் மேல் இருந்தால் உடனே நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி உடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த 25 வயது பெண் - வைரலாகும் வீடியோ!

ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த 25 வயது பெண் - வைரலாகும் வீடியோ!

நடைமுறை மாற்றம்

நிச்சயதார்த்தம் என்பது பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும். திருமணத்திற்கான உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும். அதேசமயம் நிச்சயதார்த்தம் செய்துவிட்டாலே திருமணம் ஆகிவிட்டது என்று கருதக் கூடாது. பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் திருமணம் உறுதி செய்யப்பட்டால் அந்த பரிசை திருப்பி தந்துவிட வேண்டும்.

திருமண சட்டத்தில் வரும் அசத்தல் மாற்றம் - ஏப்ரல் 15 முதல் அமல்! | April 15Th New Marriage Laws Implemented In Uae

இது 25 ஆயிரம் திர்ஹாம்களுக்கு மேல் மதிப்பு கொண்ட பரிசு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளை ஒருமித்த சம்மதத்தின் பேரில் புதிய வாழ்க்கையில் வைத்து கொள்ள உரிமை உண்டு.

இந்த குழந்தைகளின் பொருளாதார விஷயங்களை பெண்ணின் கணவர் தான் பார்த்து கொள்ள வேண்டும். இந்த அனைத்து மாற்றங்களும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.