பொங்கல் purchasing - தொலைந்த ரூ. 3500 பணம், ATM கார்டு..நெகிழ வைத்த பெண் காவலரின் செயல்..!
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை போல, அவ்வப்போது சில காவலர்கள் காட்டும் பண்பு, பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட தான் செய்கிறது.
காவல் துறை
நாட்டு மக்களின் பாதுகாப்பில் மட்டுமின்றி, அவர்களின் இன்னலிலும் பெரும் உதவியை காவல்துறையினர் தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகின்றார்.
அது போன்ற சம்பவம் ஒன்று தான், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று தற்போது அனைவரின் பாராட்டையும், கேட்போருக்கு நெகிழ்ச்சியையும் உண்டாக்கி இருக்கின்றது.
தொலைந்த பணம்..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று(15-10-2024) கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் மார்க்கெட் வீதிக்கு பொருட்களை வாங்க, கோமாளூர் கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் தனது கணவருடன் வந்துள்ளார்.
இவர் தனது பர்ஸில் வைத்திருந்த பணம் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை தவறிவிட்டு, செய்வதறியாது பரிதவித்துள்ளார். அதே நேரத்தில் தவறிப்போன பணம் மற்றும் கார்டு ஆகியவற்றை எதிர்ச்சியாக கண்டெடுத்த பெண் காவலர் வைத்தீஸ்வரி உரிய நேரத்தில் காமாட்சியை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
3500 பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கார்டுகள் காமாட்சியிடம் ஒப்படைத்த பெண் காவலர் வைத்தீஸ்வரி குறித்த செய்தி வெளியான நிலையில், அவரை பலரும் பாராட்டு வருகின்றார்.