அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு : எடப்பாடி பழனிசாமி அறிக்கை

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jul 19, 2022 07:12 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

 ஆர்.பி.உதயகுமார் தேர்வு 

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு :  எடப்பாடி பழனிசாமி அறிக்கை | Appointment Of Rb Udayakumar Deputy Opposition

ஓ பன்னீர்செல்வம் கட்சியில் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு புதிதாக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பணியாற்றி வந்த ஓபிஎஸ்-க்கு பதிலாக வேறு ஒரு நபர் தேர்வு செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டது.

தற்போது அதற்கான அறிவிப்பை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார், இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் :

"தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

 ஏகமனதாக தேர்வு

சென்னை, ஆழ்வார்பேட்டை, T.T.K. சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 - ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு :  எடப்பாடி பழனிசாமி அறிக்கை | Appointment Of Rb Udayakumar Deputy Opposition

இந்த கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு, கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணைத் தலைவர் திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் (196) திருமங்கலம் தொகுதி முன்னாள் அமைச்சர் துணைச் செயலாளர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி , M.L.A., அவர்கள் (66) போளூர் தொகுதி முன்னாள் அமைச்சர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.