சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் Apple நிறுவனம்; 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - வெளியான தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள iPhone உற்பத்தித் தொழிற்சாலைகள் மூலம் இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
iPhone உற்பத்தி
2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவுசெய்துள்ளது . இதனால் சீனாவிலிருந்து தனது iPhone உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற முயற்சித்து வருகிறது . இதனால் Apple நிறுவனம் மூலம் இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் iPhone 16 Pro மற்றும் Pro Max ஆகிய Apple-ன் புதிய மாடல்களின் உற்பத்தி விரைவில் தமிழ்நாட்டில் உள்ள Foxconn ஆலையில் தொடங்கப்பட உள்ளது மேலும் ஓசூரில் iPhone உற்பத்தியை மேற்கொள்ள இருக்கும் TATA குழுமம், புதிய தொழில் நகரத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.மேலும் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளில், 90,000 வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ள Foxconn மற்றும் TATA தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ரூ.706.5 கோடி மதிப்பீட்டில், Foxconn நிறுவனத்தைச் சேர்ந்த 18,720 ஊழியர்கள் தங்கும் வகையில் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.