ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமனம்
ஏர் இந்தியாவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு வாங்கியது.
இதையடுத்து, துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக டாடா குழுமம் நியமித்தது.
ஆனால், இல்கர் அய்சியின் பின்னணி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஏர் இந்தியாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற டாடா குழுமம் விடுத்த அழைப்பை அவர் மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து டாடா குழுமம் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திர சேகரன் ஏர் இந்தியாவின் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என். சந்திரசேகரன் தமிழ்நாட்டின் நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.