இன்று அறிமுகமாகும் iPhone 16 - சிறப்பு அம்சங்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம்!
ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900 & ஐபோன் 16 புரோ மேக்ஸ் விலை ரூ.1,44,900 தொடங்குகிறது.
iPhone 16
ஆப்பிள் நிறுவனத்தின் "க்ளோடைம்" நிகழ்ச்சியில் புதிய ஐபோன் 16 சீரிஸ் போன்களை இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ஆப்பிள் நிறுவனம் பலவித கேட்ஜட்ஸை க்ளோடைம் நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இன்று இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவனம் “இட்ஸ் க்ளோடைம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்போட் போன்ற கேட்ஜட்களுடன் ஐபோன் 16 சீரிஸ் போனையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது .அதன்படி ஐபோன் 16-ல் எதிர்பார்க்கும் அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேமரா : ஐபோன் 16 சீரிஸின் மாடல்கள், அனைத்தும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவை கொண்டிருக்கும். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ள 12 மெகாபிக்சல் கேமராவுடன் ஒப்பிடும்போது இது கணிசமான மேம்படுத்தலாக இருக்கும் .
மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் முந்தைய தலைமுறையில் இருந்து மாறாமல் 5x டெலிஃபோட்டோ கேமரா இருக்கும்.
நிறங்கள் : ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் கருப்பு, வெள்ளை (அல்லது வெள்ளி), சாம்பல் மற்றும் ரோஜா நிறங்களில் வழங்கப்படலாம். வெண்ணிலா மாடல்கள் கருப்பு, வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
ஆப்பிள் AI : ஐபோன் சீரிஸ், AI மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், வெளியாக இருக்கும் ஐபோன் 16 சீரியசில் அனைத்து மாடல்களிலும் இந்த AI உதவிகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 4,676எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கக்கூடும், ஐபோன் 16 ப்ரோ 3,355எம்ஏஎச் செல்களைப் பெறக்கூடும். ஐபோன் 16 3,561எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.
டிஸ்ப்ளே : இந்த ஐபோன் 16 சீரியசில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன்16 ப்ரோமேக்ஸ் என 4 போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் திரைகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.