இனி இரவில் மெசேஜ் செய்ய முடியாதா? - instagram புதிய கட்டுப்பாடு
இன்ஸ்டாகிராம் டீன் ஏஜ் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்ஸ்டாகிராம்
பிரபல சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமை(Instagram) உலகம் முழுவதும் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா(Meta) டீன் ஏஜ் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் கணக்குகள் மீது பெற்றோருக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது.
டீன் அக்கவுண்ட்
இதன்படி 18 வயதுக்குள்ளவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் "டீன் அக்கவுண்ட்ஸ்"(Teen Accounts) என வரையறுக்கப்பட்டு அது இயல்பாகவே பிரைவேட் கணக்காக மாற்றப்படும். இயல்புநிலை அமைப்புகளை மாற்ற பெற்றோரின் அனுமதி என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
இனி அத்தகைய கணக்குகளின் பயனர்கள் அவர்கள் பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருக்கும் கணக்குகளிடம் இருந்து மட்டுமே மெசேஜ்களை பெறமுடியும் மற்றும் இணைப்பில் உள்ளவர்களால் மட்டுமே ஒரு போஸ்டில் அவர்களை டேக் செய்யமுடியும்.
மேலும் இந்த கணக்குகளை பயன்படுத்துபவர்களுக்கு சென்சிடிவ் பதிவுகள் காட்டப்படாது. 1 மணி நேரத்திற்கு ஒரு முறை இன்ஸ்டாகிராம் செயலியை விட்டு வெளியே செல்லுமாறு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.
பெற்றோருக்கு அதிகாரம்
இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இந்த கணக்குகள் ஸ்லீப் மோடுக்கு சென்று விடும். இந்த நேரத்தில் நோட்டிபிகேஷன் எதுவும் வராது. இந்த நேரத்தில் அனுப்பப்படும் செய்திகளுக்கு auto-replies தான் கிடைக்கும்.
முக்கியமாக கடந்த 7 நாட்களில் தங்கள் குழந்தைகள் யார் உடன் chat செய்தார்கள் என்ற வசதியை பெற்றோர் பார்க்க முடியும். ஆனால் அவர்களின் உரையாடலை பார்க்க முடியாது.
எப்போது முதல்
மேலும், ஒரு நாளில் எவ்வளவு நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடலாம் என்ற கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்க முடியும். இந்த நேரத்தை தாண்டிய பிறகு இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியாது. குறிப்பிட நேரத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்கும் வசதியும் உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இந்த திட்டம் 60 நாட்களில் அமலுக்கு வர உள்ளது. ஐரோப்பா நாடுகளில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது.