மைக் கொடுங்க..கொந்தளித்த ஈபிஎஸ் - அதெல்லாம் தரமுடியாது..கடும் அமளியில் சட்டப்பேரவை!
தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது அதிமுகவினர் கடும் அமலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரம் இன்று காலை தொடங்கிய நிலையில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்திற்கு பதில் உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவையில் கலகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் வந்திருக்கிறீர்களா? என பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ஈபிஎஸ் காட்டம்
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்.எல்.ஏக்களை அமைதிகாக்கும் படி கூறியபோது, ”மைக் கொடுங்க” என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேட்டார். அப்போது மைக்கெல்லாம் தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு பதில் கொடுத்தார்.
இருப்பினும் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமலில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம் எல் ஏக்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்திஎதிர்ப்பு தீர்மானத்தில் மத்திய அரசு ஆதரவாக செயல்பட வேண்டிய அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கூச்சலிட்டு வருவதாகவும்,
வெளியேற்றம்
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையைக் கண்டு அதிமுக அஞ்சுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவினர் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.