நாடாளுமன்றத்தில் அடிதடி; மோடியிடம் மன்னிப்பு கேட்கனும் - உள்நாட்டிலேயே எதிர்ப்பு!

Narendra Modi Maldives
By Sumathi Jan 31, 2024 05:06 AM GMT
Report

அதிபரிடம், பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்.பி ஐசா(ISA), தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலானது.

maldives president vs modi

முன்னதாக, லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் சில கருத்துக்களை முன்வைத்தனர்.

மாலத்தீவில் ஏன் இந்திய ராணுவம்; வெளியேற கூறும் அதிபர் - என்ன சிக்கல்!

மாலத்தீவில் ஏன் இந்திய ராணுவம்; வெளியேற கூறும் அதிபர் - என்ன சிக்கல்!

மோடியிடம் மன்னிப்பு?

இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது எனவும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால், பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர். தொடர்ந்து, இந்திய சுற்றுலா பயணிகள் வருகை மாலத்தீவில் கடுமையாக சரிந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அடிதடி; மோடியிடம் மன்னிப்பு கேட்கனும் - உள்நாட்டிலேயே எதிர்ப்பு! | Apologise To Pm Modi Maldives President

இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.