அருவருக்கத்தக்க படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ் - வெடித்த சர்ச்சை - பகிரங்க மன்னிப்பு!

India Israel
By Sumathi Nov 29, 2022 07:37 AM GMT
Report

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் அருவருக்கத்தக்கப் படம் என இஸ்ரேல் இயக்குநர் விமர்சித்தார்.

தி காஷ்மீர் பைல்ஸ்

கோவா, பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இஸ்ரேல் திரைப்பட இயக்குனர் நடவ் லபிட் பேசுகையில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம்' என்றார்.

அருவருக்கத்தக்க படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ் - வெடித்த சர்ச்சை - பகிரங்க மன்னிப்பு! | Apologise To Israel Envoy As The Kashmir Files Row

இதற்கு பல கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், இவரது கருத்து குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவ்ர் கிலொன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி காஷ்மீர் பைல்ஸ் குறித்து விமர்சனம் செய்த நடவ் லபிட்டிற்கு ஒரு திறந்த மடல் இது.

 மன்னிப்பு

நடவ் லபிட் நீங்கள் வெட்கப்படவேண்டும் ஏனென்றால், இந்திய கலாசாரத்தில் விருந்தினர்கள் கடவுளை போன்றவர்கள். உங்களை மதித்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை கோவா சர்வதேச - இந்திய திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவராக உங்களை அழைத்த இந்தியர்களை நீங்கள் மிகவும் மோசமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள்.

நான் திரைப்படத்துறை நிபுணர் அல்ல ஆனால், இந்தியாவில் திறந்த நிலை காயமாக உள்ள அதற்கு இன்னும் விலைகொடுத்துக்கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வு குறித்து ஆழ்ந்து தெரிந்துகொள்ளாமல் பேசுவது சரியானதல்ல.

இந்தியா - இஸ்ரேல் மக்கள் இடையேயான நட்பு மிகவும் வலிமையானது. நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பிலும் நிலைத்து நிற்கும். ஒரு மனிதனாக நான் வெட்கப்படுவதாக உணர்கிறேன். இந்தியாவின் தாராள மனப்பான்மை மற்றும் நட்பிற்கு நாங்கள் திருப்பி செலுத்திய மோசமான நடத்தைக்காக இந்திய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.