காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு..!

Israel
By Thahir Aug 06, 2022 07:40 AM GMT
Report

இஸ்ரேல் படைகள் காஸா பகுதியில் தற்போது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் 

இஸ்ரேல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை கைது செய்திருந்தது.

இந்நிலையில் காஸாவின் மத்திய பகுதியில் நேற்று இரவு பயங்கர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் மோதல் போக்கு என்பது நடந்துகொண்டு வருகிறது.

Gaza

இதில் ஒரு பகுதியாக, பாலஸ்தீனியர்கள் தீப்பிடிக்கும் வகையிலான பலூன்களை பறக்கவிட்டதால் காஸாவின் மத்திய பகுதியில் பதில் தாக்குதலை கொடுத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

5 வயது சிறுமி உட்பட 10 பேர் உயிரிழப்பு 

பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் "யாயிட் லாபிட்" கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது "ஹிமாஸ் பயங்கரவாத" அமைப்பின் மூத்த தளபதி அல் ஜபாரி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Gaza

இஸ்ரேல் படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 5 வயது சிறுமி, ஒரு பெண் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 79 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.