அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி; தொட்டு பார்த்தால் கெட்டுப் போவீர்கள்...ஜெயக்குமார்!
அதிமுகவை தொட்டு பார்த்தால் கெட்டுப் போவீர்கள் என ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
ஜெயக்குமார்
சென்னையில் தமிழக பாஜக சார்பில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு அதிமுகாவினர் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை சாடியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது.
விட்டில் பூச்சி..
அண்ணாமலை விரக்தியில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பேசி வருகிறார்.மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு மேனேஜர் மட்டுமே. அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார்.
அ.தி.மு.க.வைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள். எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பா.ஜ.க.வுக்கு என்றுமே பகல் கனவுதான்.
அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.