யார் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாமே - பொதுவானது தான் கோவில் - இபிஎஸ்..!
அயோத்தி ராமர் கோவில் அனைவர்க்கும் பொதுவானது என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனம்
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டு வருகின்றார்.
யார் வேண்டுமானாலும்
சாமி தரிசனத்தை முடித்த பின்னர் திருப்பதி கோவிலில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அயோத்தி கோவில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி கோவிலும் அனைவர்க்கும் பொதுவானது என்று கூறி, அனைவருமே அங்கு சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறினார்.
மேலும், நேற்று கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுக்கள் தேர்தலில் பணிகளில் மும்முரம் காட்டி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.