திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Tamil nadu Edappadi K. Palaniswami Salem
By Jiyath Jan 15, 2024 10:53 AM GMT
Report

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்களத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! | People Are Suffering Under Dmk Rule Eps

அப்போது பேசிய அவர் "மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மோசமான ஆட்சி என்பதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்துள்ளனர். திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது.

இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் என்ன நன்மையை அனுபவித்தார்கள்? ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

விமர்சனம் 

தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் கவலையில்லை இல்லாத அரசு திமுக ;நியாய விலைக் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு முறையே பொருட்கள் வழங்க வேண்டும்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! | People Are Suffering Under Dmk Rule Eps

நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், வன்மையாக கண்டனங்கள். அதிமுக ஆட்சியில் திட்டமிடுதலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தது.

விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியை அதிமுக அரசாங்கம் அமைத்தது என்ற சிறப்பை பெற்றோம். திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.