தைரியமா காதலை சொன்னார்; ஓகே சொல்லிட்டேன் - மனம் திறந்த அனுஷ்கா!
தனது காதல் அனுபவம் குறித்து நடிகை அனுஷ்கா தகவல் பகிர்ந்துள்ளார்.
நடிகை அனுஷ்கா
ரஜினி, விஜய் தொடங்கி நாகர்ஜூனா, பிரபாஸ், அல்லு அர்ஜூன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா. குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்தார். ஆனால் அந்த படம் பெரும் வரவேற்பை பெறவில்லை. 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
காதல் அனுபவம்
நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று அவ்வப்போது வதந்திகள் பரவும். ஆனால் இருவரும் நண்பர்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுஷ்கா, “நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது.
ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று தெரிவித்துள்ளார்.